பாலக்கோட்டில் நில தரகர்கள் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜூன், 2023

பாலக்கோட்டில் நில தரகர்கள் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எல்.ஐ.சி அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் இந்தி தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகரர்கள் நல சங்கம் சார்பில் உறுப்பிணர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட தலைவர் பீமன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் அப்புசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் தர்மபுரி மாவட்டத்திற்க்கு 28ம் தேதி வருகை தர உள்ள அகில இந்தியதலைவர் விருகை.வி.என்.கண்ணன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.


நிலம் சம்மந்தமாக வாங்க விற்க அனுகும் போது  உறுப்பிணர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவும், சங்கம் மென்மேலும் தொடர்ந்து வளர பாடுபட வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.


இந் நிகழ்ச்சியில் நகர தலைவர் சண்முகம், தொகுதி தலைவர் முருகானந்தம், ஒன்றிய தலைவர் நயாஸ், ஒன்றிய பொருளாளர் பழனிவேல், நகர பொருளாளர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள்.உறுப்பிணர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad