முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் 27.08.2023-ம் தேதி காலை 08.00 மனிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடள் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நாள்கு சக்கர வாகளத்திற்கு ஏலத்தொகைக்கு 18 விழுக்காடு, இருசக்கர வாகளத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அவர்களிள் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி தொலைபேசி என்கள்: 04342- 230759, 262561, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தருமபுரி, தொலைபேசி எண் - 04342 - 230759.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக