அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வானவியல் தொலை நோக்கியின் மூலம் சூரியன் மற்றும் அதில் உள்ள கரும்புள்ளிகள் பார்வை இடும் பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 ஜூன், 2023

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வானவியல் தொலை நோக்கியின் மூலம் சூரியன் மற்றும் அதில் உள்ள கரும்புள்ளிகள் பார்வை இடும் பயிற்சி.


பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், Dr.  கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் பள்ளி  மாணவிகளுக்கு வானவியல் தொலை நோக்கியின் மூலம்  சூரியன் மற்றும் அதில் உள்ள கரும்புள்ளிகள்  பார்வை இடும் பயிற்சி முகாம் இன்று நடைப்பெற்றது.


Dr.  கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில்  பள்ளி மாணவர்களுக்கு நவீன அறிவியல் மற்றும் வானியல் விஞ்ஞான அறிவை வளர்க்கும் வகையில்  பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி பருவத்திலேயே அறிவியல் மற்றும் ஆராய்சி குறித்து ஆர்வம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.


தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ள நிலையில் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு வானில் உள்ள சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் குறித்து நவீன தொலை நோக்கியின் மூலம் காட்டப்பட்டு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கினைப்பை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியை செல்வி அவர்கள்  செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

Post Top Ad