இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தலைமை வகித்தார். இதில் மாசு காட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நித்திய லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது. தமிழக முழுவதும் 2019 ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து உத்தவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ப்பட்டு வருகிறது. அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்த கேட்டுக் கொண்டார்,
இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா, உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் செல்வம், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் அலுவலக ஊழியர்கள், தூய்மை காவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக