தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரை சேர்ந்தவர் ராஜா இவர்களது மகன்கள் ஜெகன் ராஜா 39, அருண் ராஜா,37 ஆகிய இருவரும் பர்பக்ட் சொல்யூசக்ஷன் எனும் பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இதில் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு கூடுதலாக வட்டி வழங்குவதாகவும், நிலம் வாங்கி கொடுப்பதாகவும், ரியல் எஸ்டேட் மூலம் வீடு கட்டி கொடுப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிதி நிறுவனத்தை ஓசூர், ஈரோடு, திருப்பத்தூர், ஏலகிரி, போச்சம்பள்ளி, தர்மபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் தொடங்கி பணம் வசூல் செய்து உள்ளனர். இதில் பலர் நம்பி பணத்தை முதலீடு செய்து உள்ளனர். ஆனால் கூறியது போல பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட நபர்கள் கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி சிவக்குமார், தர்மபுரி போலீசில் இன்ஸ்பெக்டர் கற்பகம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட போலீசார் குழு பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூனையானூரில் உள்ள அருண் ராஜா வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் லேப் டாப், இருசக்கர வாகனம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக