தருமபுரி - சேலம் சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பாதையை விபத்தில்லா சாலையாக அமைக்க கோரி டெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மனுக்கள் வழங்கினார்.


தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பகுதி சாலை வளைவு மிகுந்த சாலையாகும். இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களால் அதிக அளவில் உயிரிழப்புகளும், பலத்த காயங்களும், உடல் உறுப்புகளும் இழக்கின்ற சூழ்நிலை உருவாகின்றன. நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனம் இயக்குபவர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து பயணம் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டால் பல கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன சூழல் ஏற்படுகிறது. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறையவில்லை.
தொப்பூர் மலைப்பகுதி சாலையை ஆய்வு செய்து, விபத்தில்லாத சாலையாக உடனடியாக அமைக்க வேண்டும். பாளையம்புதூர் பிரிவு சாலை, சேசம்பட்டி பிரிவு சாலையில் பாலம் அமைக்கவும் சவுளூர் பிரிவு சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டுமென இன்று டெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து மனுக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடன் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள், மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக