மத்திய நீர் வழித்துறை மற்றும் ஜல் சக்தி அதுறை மைச்சர் ஸ்ரீ ககேந்திர செகாவக் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் S.P.வெங்கடேஷ்வரன், இரா.அருள், S.சதாசிவம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள்.


- காவிரி ஆற்றில் பெங்களூர் கழிவுநீர் கலக்கப்படுகிறது, கழிவு நீர் கலக்காமல் தடுத்திட வேண்டும். குடிநீருக்கும், விவசாயத்திற்கும் காவேரியே நம்பி இருக்கிறோம், கழிவுநீர் கலக்காத தூய்மையான நீர் வழங்க வேண்டும். மாசுபட்டுள்ள காவிரியை சுத்தப்படுத்தி பாதுகாத்திட வேண்டும்.
- மழைக்காலங்களில் கடந்த ஆண்டு அதிகமான மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பி வழிந்து 200+ டிஎம்சிக்கு மேல் கடலில் வீணாக கலந்தது. அந்த தண்ணீர் முழுவதும் கடலில் கலக்காமல் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகளை கட்டி அனைத்து மழை நீரையும் தேக்கி வைக்க வேண்டும். அதற்கான சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
- தருமபுரி மாவட்ட மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர், 1000 அடிக்கும் மேல் உள்ள ஆழ்துளை கிணறுகளில் ஃப்ளோரைடு என்ற நோய் நச்சு இருப்பதால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என்று நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனைத்து மக்களுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் சீரான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் கூடுதலாக ஒகேனக்கல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முழுவதும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி விவசாய மக்கள் பலன் பெறும் வகையில் தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை நீர் ஏற்றும் பம்பு அமைப்பதற்கு நிதி ஒதுக்கி அந்த திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அமைச்சர் அவர்கள் கூடுதலாக நிதி ஒதுக்கி செய்து விரைவாக நிறைவேற்றி அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய நீர் வழித்துறை மற்றும் ஜல் சக்தி துறை அமைச்சர் ஸ்ரீ ககேந்திர செகாவக் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக