ஏரியூர் YEA அமைப்பின் நான்காவது முறையாக இந்த அமைப்பு இரத்ததான முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஜூன், 2023

ஏரியூர் YEA அமைப்பின் நான்காவது முறையாக இந்த அமைப்பு இரத்ததான முகாம்.


ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வு இளைஞர்கள் ஒன்றிணைந்து YEA (Youth Employer Association)  என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் இரத்ததானம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் மற்றும் பசுமையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலக இரத்ததான தினம் (ஜீன்-14) முன்னிட்டு  (ஜீன்-10) ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையிலும் மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி இரத்ததான வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தினர். இந்த இரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர். நான்காவது முறையாக இந்த அமைப்பு இரத்ததான முகாம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 400-க்கு மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.


இந்த இரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் விருது பெற்ற சின்னபள்ளத்தூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கூத்தப்பாடி பழனி அவர்கள் கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கியவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் புத்தகங்களை வழங்கினார் மற்றும் ஏரியூர் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர்கள் திரு.கார்த்திக், திரு.இராமதாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கினர். தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இரத்ததானங்களை பெற்றுக் கொண்டனர்.  


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை யூத் எம்ப்ளாயர் அசோசியேசனின் (YEA) தலைவர் பாபு செயலாளர் கணபதி பொருளாளர் குப்புசாமி மற்றும் YEA குழு உறுப்பினர்கள் கலையரசன், சதீஸ், வன்னியர்செல்வன், சத்தியராஜ், ஜெய்சங்கர், ராமசந்திரன், இதயசந்திரன், ஜெய்சங்கர், தமிழ், முத்துக்குமார், கோவிந்த்,  கோகுல், முத்துமணி உள்ளிட்டவர்கள் மேற்கொண்டனர். இரத்ததானம் வழங்கி அனைவருக்கும் சான்றிதழ்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad