பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் 14-7-2023 அன்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைப்பெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம் அவர்களும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் தங்கள் பகுதியை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்கவும், தாங்களும் ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்களும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக