பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மீன்கள் பார்வையிட்டு இருப்பு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த திலேபியா,ரோக், ரூப்சந்த்( பாறை மீன்),விரால், மிருதுளா மீன்கள் என அனைத்து வகையான மீன்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஒரு சில கடைகளில் தரம் குறைவான கெட்டுப்போன விரால் மற்றும் திலேபியா வகை மீன்கள் சுமார் 15கிலோ அளவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
மேற்படி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டு தொடர்ச்சியாக இப்படி நடந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை, எம்.ஜி. ரோடு, உள்ளிட்ட பகுதியில் உள்ள அசைவ, துரித உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர் ஆய்வில் ஒரு சில கடையிலிருந்து தடை செய்யப்பட்ட நெகிழி கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பார்சல் செய்வதற்கு சில்வர் பேப்பர்களில் பிரியாணி, குஸ்கா, பாஸ்ட் புட், பரோட்டா மற்றும் சில்லி சிக்கன், சில்லி இறைச்சி போன்ற உணவு வகைகள் நேரடியாக சில்வர் தாளில் படாமல் வாழை இலை பயன்படுத்தி அலுமினிய பாக்ஸ் கன்டெய்னர்களை உபயோகிக்க வலியுறுத்தப்பட்டது.
இரண்டு கடைகளிலிருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட சில்லி இறைச்சியும், பலமுறை பயன்படுத்தி சமையல் எண்ணெய் இரண்டு லிட்டர் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி, எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத கடைகளுக்கு உடனடியாக எடுக்க விழிப்புணர்வு வழிவகை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக