தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரணஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த 3ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியின் தோழிகள் மற்றும் உறவிணர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் பாலக்கோடு போலீசில் இன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக