பேளாரஅள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனம் ஆடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஜூலை, 2023

பேளாரஅள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனம் ஆடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு.

மாதிரி கோப்பு படம்.


தருமபுரி  மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5ம் தேதி ஸ்ரீக ரக செல்லியம்மன் கோவில் மண்டு திருவிழா நடைப்பெற்றது, அன்று மாலை நடைப்பெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை நிர்வான உடையுடன் பெண்கள் நடனம் ஆடினர். நிகழ்ச்சிக்கு அனுமதிக்கும் போதே பாலக்கோடு போலீசார் அரைகுறையாக ஆபாச உடை அணிந்து  நடணம் ஆடக்கூடாது என செயல்முறை வழிகாட்டி ஆணை வழங்கியும் அதனை மீறி ஆபாசம் நடனம் நடத்தியுள்ளனர். 


இதுகுறித்து பேளாரஅள்ளி வி.ஏ.ஓ. துரைராஜ் இன்று  பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேளாரஅள்ளியை சேர்ந்த முனியப்பன் (60) பெரியாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (28), சித்திரப்பட்டியை சேர்ந்த செல்வம் (30) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad