பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூலை, 2023

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்.


பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி  வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் க.ஜெயலட்சுமி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மா.சங்கர், நகர செயலாளர்கள் கி.வெங்கடேசன், வே.சத்தியமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன், பேரூர் தலைவர் பி.சுதாகர், காவல்துறை(ஓய்வு)பி.காவேரியப்பன், பேரூர் பொறுப்பாளர்கள் ஜி.சுகுமார், ஜி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.


பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேரூரையாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.இரா.செந்தில், மாநில துணை தலைவர்கள் பெ.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் க.மாது, மாவட்ட பொருளாளர் கு.சரவணகுமாரி, சிறப்பு பேச்சாளர்கள் கா.கா.சித்துராஜ், க.சதாசிவம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

இந்நிகழ்ச்சியில், ஒ.கே.சுப்ரமணியம், எம்.கே.சுதாகிருஷ்ணன், கே.இ.கிருஷ்ணன், ஆ.அன்பழகன், ரெ.மு.மனோகரன், பீ.ராஜா, ராஜவேல், த.கோ.சின்னசாமி, பெ.ரவி, சு.ராமமூர்த்தி, இரா.ஜெயக்குமார், து.சத்தியமூர்த்தி, ப.சி.சிவக்குமார், ஆ.சத்ரியபிரபாகரன், பெரியம்மாநாகு, இரா.கார்த்திகேயன், தி.வாசுநாயுடு, க.அரங்கராசு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், அணிகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பலர் திரளாக கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில், இலக்கியம்பட்டி பேரூர் செயலாளர் மா.யுவராஜ் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad