கம்மாளப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தல 5ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கிய தொழிலதிபர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஜூலை, 2023

கம்மாளப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தல 5ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கிய தொழிலதிபர்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் 2022- 23ம் கல்வியாண்டில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி  அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா தொழிலதிபர் மாதேஷ் தலைமையில் இன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி நடராஜன் முன்னிலை வகித்தார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.


நிகழ்ச்சியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பில் 450க்கு மேல் மற்றும் 12ம் வகுப்பில் 500க்கு மேல்  தேர்வுகளில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும், என் எம்.எம்.எஸ் தேர்வில் வெற்றி  பெற்ற 2 மாணவர்கள், நீட் தேர்விற்க்கு பயிற்சி பெறும் 2 மாணவர்கள் என  மொத்தம்  12 மாணவர்களுக்கு   ஊர் பொதுமக்கள் சார்பாகj தொழிலதிபர்கள்  மாதேஷ், அமெரிக்கா வாழ் முன்னாள் மாணவர் சதீஷ் மற்றும் இப்பள்ளி சாந்தி ஆசிரியர்  ஆகியோர் 12 மாணவர்களுக்கும் தல ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கதொகை வழங்கி மாணவர்களை கெளரவப்படுத்தினார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருவது குறிப்பிடதக்கது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், முன்னாள் தலைவர் மற்றும்  நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும்  உறுப்பிணர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


ஆசிரியர்களுக்கு மாதேஸ் சார்பாக  நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப பள்ளி  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை ஆசிரியர் மகாலிங்கம் தொகுத்து  வழங்கினார். இவ்விழாவில் மேஜக் ஷோ நடைபெற்றது, நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் சாந்தி நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad