அதியமான் அரசு ஆண்கள் பள்ளிக்கு ரூ.6 இலட்சம் மதிப்பில் இருக்கை மற்றும் மேசைகளை வழங்கிய MLA. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஜூலை, 2023

அதியமான் அரசு ஆண்கள் பள்ளிக்கு ரூ.6 இலட்சம் மதிப்பில் இருக்கை மற்றும் மேசைகளை வழங்கிய MLA.


தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்து, பார்வையிட்ட போது மாணவர்களுக்கு சில வகுப்பறையில் நாற்காலிகள் பற்றாக்குறை உள்ளதாக ஆசிரியர்கள் சுட்டிகாட்டினர். அதனை தொடர்ந்து மாணவ  மாணவிகளின் நலன் கருதி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 6.00 இலட்சம் மதிப்பீட்டில் டெஸ்க்,பென்ச் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தார். பள்ளிக்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு டெஸ்க், பென்ச் பள்ளிக்கு வழங்கினார். 


இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், நகர் மன்ற துணை தலைவர் அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முல்லைவேந்தன், பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் கனகா, பாமக நகர செயலாளர்கள் கி.வெங்கடேசன், து.சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பாமக ஊடகப்பேரவை மாவட்ட துணை செயலாளர் சிவா, மாதவன், அருள், வெங்கடேசன், செந்தில், ஜெகன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad