கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிட ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுரை வழங்க ஆளுநர், முதலமைச்சர் மற்றும் 13 உயர் அலுவலருக்கு கடிதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூலை, 2023

கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிட ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுரை வழங்க ஆளுநர், முதலமைச்சர் மற்றும் 13 உயர் அலுவலருக்கு கடிதம்.


பாலக்கோடு சமூக ஆர்வலர் திரு செல்வம் அவர்கள் கிராம சபை கூட்ட அறிவிப்பினை 7 நாட்களுக்கு முன்பு வெளியிட ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுரை வழங்க ஆளுநர், முதலமைச்சர் மற்றும் 13 உயர் அலுவலருக்கு கடிதம்.                   


தருமபுரி  மாவட்டம், பாலக்கோடு  ஊராட்சி ஒன்றியம், பி.செட்டி அள்ளி  கிராம ஊராட்சி தொடர்பாக இந்த கோரிக்கை மனுவை இந்திய அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள  உரிமைகள் அடிப்படையில் அனைத்து உயர் அலுவலருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு கிராம சபை கூட்டம் கூடுவதற்கு 7- நாட்களுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட வேண்டும். துண்டு பிரசுரங்கள் பிளக்ஸ் பேனர்  போன்ற வகைகளில் கிராம சேவை தொடர்பான கூட்ட அழைப்பு பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் அரசாணைகள் மூலமாக ஊராட்சியின் செயல் அலுவலரான ஊராட்சி மன்ற தலைவர் கடமை விதித்துள்ளது. ஆனால் இது வரை கடந்த காலத்தில்  நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில்  ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபை கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு வெளியிட வில்லை.

 

தமிழ்நாடு கிராமசபை  கூட்டம் (கூட்டுதல்  நடத்துதல் குறைவெண்) விதிகள் -1998 விதி எண் 3- ன் படி  குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்ட அறிவிக்கை ஊராட்சி தலைவரால் வெளியிடப்பட வேண்டும். துண்டு பிரசுரங்கள் தெரிவிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவருக்கு சட்டம் கட்டளையிடுள்ளது.


ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களில் தண்டோரா மூலமாக கிராமசபை கூட்டம் நடக்கும் நாள் இடம் நேரம் கூட்டப் பொருள் அஜென்டா ஆகிய விபரங்கள் ஊராட்சி மன்ற தலைவர் தெரியப்படுத்த  வேண்டும் மற்றும்  ஊராட்சி மன்ற அலுவலகம் தகவல் பலகை பள்ளி கட்டிடங்கள் மதிய உணவு கூடம் தொலைக்காட்சி அறை கிராமக்கோவில்கள் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் எழுத்து மூலமான கூட்ட அறிவிப்பினை பொதுமக்களுக்கு பார்வையில் படும் வண்ணம் வெளியிட வேண்டும்.


தமிழ்நாடு கிராமசபை கூட்டம் (கூட்டுதல்  நடத்துதல் குறைவெண்) விதிகள்-1998  விதி எண் 3(3) ன் படி கூட்ட அறிவிப்பின் நகல் மற்றும் பொருள் ஊராட்சியின் ஆய்வாளருக்கு 7 நாட்களுக்கு முன்பு கட்டாயம் அனுப்பப்பட வேண்டும் என்று சட்டம் ஊராட்சி மன்ற தலைவருக்கு கட்டளையிட்டுள்ளது. இவற்றை ஊராட்சி மன்ற தலைவர் கட்டாயம் செய்ய வேண்டும்  ஊராட்சி தலைவர்  அவர் விரும்பினால் செய்யாமல் இருப்பதற்கான அதிகாரத்தை சட்டம் வழங்கவில்லை.


ஆனால் கடந்த காலத்தில் நடைபெற்ற  எந்த ஒரு கிராம சபை கூட்டத்திற்கும்  சட்டப்படி 7 நாட்கள் முன்னதாகவே கிராம சபை கூட்ட அறிவிப்பு  வெளியிடப்படவில்லை.  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு  கடிதம் மூலமாக கிராம சபை கூட்ட அறிவிப்பு அனுப்பப்டவேயில்லை.  எந்த வகையிலும் கிராம சபைக் கூட்ட அறிவிப்புகள்  வெளியிடவில்லை.


மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் முறையாக நடப்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும் அதிகாரமும் ஊராட்சிகளில் ஆய்வாளர் என்கின்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு  உள்ளது.


தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் படி கட்டாயம் செய்ய வேண்டிய கடமையான ஏழு நாட்களுக்கு முன்பாக கிராம சபை கூட்ட அறிவிப்பினை வெளியிடவும் விளம்பரப்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவும் செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களும்  உரிய அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர், முதலமைச்சர் போன்ற 13 உயர அலுவலர்களுக்கு பத்து ரூபாய் இயக்கத்தின் மாற்றத்திற்கான திறனாளிகள் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு செல்வம் அவர்கள் கடிதம் எழுதி அனுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad