தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வரவேற்று, பெற்றுகொண்டார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வரவேற்று, பெற்றுகொண்டார்கள்.


தருமபுரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வரவேற்று, பெற்றுகொண்டார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியினை முன்னிட்டு, பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (29.07.2023) வரவேற்று, பெற்றுகொண்டார்கள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வருகின்ற 03.08.2023 முதல் 12.08.2023 வரை சென்னையில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின் (2007-ம் ஆண்டுக்கு பிறகு) ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.


7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு பெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கார்த்திக் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.


7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 16.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் பல கோடிகள் செலவிடப்பட்டு செயற்கை புல் மைதானம் உலக தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் " பாஸ் தி பால் (Pass the Ball) நிகழ்ச்சியை 20.07.2023 அன்று சென்னை மெரினா கடற்கரையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.


இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பையானது மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஹாக்கி கழக நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து பச்சமுத்து கலைமற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வரவேற்று. பெற்றுகொண்டார்கள்.


இக்கோப்பையானது தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ.கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தர்மபுரி மாவட்ட கபடி சங்க தலைவர் திரு பாஸ்கர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாதப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad