தண்டுகாரம்பட்டி கிராமத்தில் ரூபாய் 7.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எஸ்.பி.வெங்கடேஷ்வரன் MLA பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 ஜூலை, 2023

தண்டுகாரம்பட்டி கிராமத்தில் ரூபாய் 7.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எஸ்.பி.வெங்கடேஷ்வரன் MLA பங்கேற்பு.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி  ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, தண்டுகாரம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 7.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். 


தொடர்ந்து அதே கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியில் ரூபாய் 13.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கோ.லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஆறுமுகம், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மா.முருகன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி தமிழ்செல்வன், ஒன்றிய தலைவர் சிவபிரகாசம், ஒன்றிய துணை செயலாளர் வீ.தவமணி, கந்தசாமி உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad