இதன் பிறகு செய்தியாளர்களிடம் பிஷேக்கும்போது, "தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பென்னாகரம் மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய் மற்றும் சிசு பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல இரண்டு ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இரண்டு வாகனங்கள் வழங்கக்கோரி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் கேட்டும் வழங்காத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து வாகனங்களை வழங்கி இருக்கிறோம்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படும் தொப்பூர் பகுதியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைத்துள்ளனர். வனப்பகுதியில் 3.5 ஹெக்டேர் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் வேலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் மத்திய அரசிடம் தருமபுரி அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீடு வரும் பொழுது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும், தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 70 சதவீத நிலங்களை கையகப்படுத்திய பின்பு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக