தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதிகளில் 2023- 24ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் செயல்பட்டு வரும் 12 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி விடுதிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு குழு மூலம் மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பிணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி காப்பாளர்கள் , தேர்வு குழு உறுப்பிணர்கள் மோகன், பெரியசாமி, பட்டு அஜிசுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக