

இந்நிகழ்விற்கு சின்னப்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் அதிபதி தலைமை வகித்தார், ஒன்றிய கவுன்சிலர் சேகர் வரவேற்று பேசினார். ஊர் கவுண்டர் வடிவேல், மந்திரி கவுண்டர் முனுசாமி, பொன்னுசாமி உள்ளிட்டோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர் நா.நாகராஜ் நோக்கவுரை வழங்கினார். அஜ்ஜனஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் மாது, ஆசிரியர் ராஜேஷ், ஆசிரியர் ஜேக்கப் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மா.பழனி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் " பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் . வடமொழி கலப்பு இல்லாமல் பெயர் வைப்பது அவசியம். கைப்பேசி பயன்படுத்தும் நேரத்தை குறைத்து தங்கள் குழந்தைகளுக்கு அறிநெறி கதைகள் கூறலாம். அனைத்து வீடுகளிலும் திருக்குறள் புத்தகம் இருக்க வேண்டும் என்றார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோகுல காந்தி, வெண்ணிலா மல்லமுத்து, சந்தோஷ் குமார், செளபரணி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவன் துரைராஜ் நன்றி கூறினார் இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக