வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக விளையாட்டு துறை சார்பாக சான்றிதழ்களுடன், பதக்கம், கோப்பை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் சார்பாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதா மாரியப்பன் கால்பந்தாட்ட வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்தி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளியில் பயின்று மாவட்ட அளவில் சாதனை படைத்தது பாராட்டுக்குரியது. விளையாட்டில் மட்டுமல்லாது கல்வியிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம், உதவி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குமு தலைவர் ஜோதி, உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், கவிதா மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக