தருமபுரி மேற்கு மாவட்டத்தில் திமுக நெசவாளர் அணி அமைப்பாளராக இராஜபார்ட் ரங்கதுரை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக பட்டு அஜிஸ்யுல்லா நியமிக்கப்பட்டுள்ளார் துணைத் தலைவராக சுகுமார் நெசவாளர் அணி துணை அமைப்பாளர்களாக குமரவேல், தேவராஜன், ராமசாமி, பாலமுருகன், அண்ணாமலை, சாமிநாதன், காளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நெசவாளர் அணியைச் சேர்ந்த அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை மற்றும் தலைவர் துணைத் தலைவர்,துணை அமைப்பாளர்கள் ஆகியோர் முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான முனைவர் பழனியப்பன் அவர்களிடம் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் வாழ்த்துக்கள் பெற்றனர். அப்பொழுது மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் மற்றும் மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக