மனைவியை கழுத்து அறுத்து கொல்ல முயற்சி செய்த கணவன் உட்பட இருவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூலை, 2023

மனைவியை கழுத்து அறுத்து கொல்ல முயற்சி செய்த கணவன் உட்பட இருவர் கைது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்ராஜ் கவுண்டர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் இவரது மனைவி  ஈஸ்வரி (வயது.45) இவர்களது  2 மகன்களும்  பாலக்கோடு பஸ் நிலையம் எதிரே செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

ஈஸ்வரிக்கு  கிட்னி பழுதடைந்து நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். நோய்வாயப்பபட்ட மனைவியை தொல்லையாக நினைத்த அவரது கணவர் சரவணன் (51), மனைவியை கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது பங்காளி பச்சையப்பன் (50) என்பவருடன் கூட்டு சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றனர்.


வீட்டிற்க்கு வந்த அவரது மகன் நவீன்குமார் தாய் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவீர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து அவரது மகன் பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.


இது குறித்து பாலக்கோடு போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டதில் ஈஸ்வரியின் கனவரும், அதே பகுதியை சேர்ந்த பங்காளி பச்சியப்பனும் சேர்ந்து கொலை முயற்சி செய்தது தெரிய வந்தது. இருவரையும் நேற்று  கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கனவனே மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad