தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில் புதிய மின்மாற்றிகள் துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஜூலை, 2023

தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில் புதிய மின்மாற்றிகள் துவக்கம்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், எச்சனஅள்ளி ஊராட்சி, தின்னூர் பனந்தோப்பு கிராமத்தில் மின்சார பற்றாக்குறையை போக்குகின்ற வகையில் ரூபாய் 9.25 இலட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, இதன் தொடக்க விழா தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக  கலந்துக்கொண்டு புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மின்சார உதவி செயற்பொறியாளர் பூவரசன், உதவி பொறியாளர் மோகனா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் லிங்கம்மாள், சிலம்பரசன், அழகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தவமணி, ஆறுமுகம், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஊராட்சி துணைத் தலைவர்கள் ராஜகோபால், ரஞ்சித்குமார், வார்டு உறுப்பினர் வீரமணி, சின்னசாமி, குமார், முருகன், சிவகுரு மற்றும் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad