கல்வி வளர்ச்சி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஜூலை, 2023

கல்வி வளர்ச்சி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. தருமபுரி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி நிர்வாகத்திற்கு உட்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் ஏரியூர் ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் க. குணசேகரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) இ. மான்விழி அவர்களின் உத்தரவுபடி 5 ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்ட போட்டிகள் பள்ளி அளவில் 11.7.23ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது.


அதன் பிறகு ஒன்றிய அளவில் 13.7.23ந்தேதி போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் 14.7.23 அன்று கலந்து கொண்டனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்.



நடுவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று இடம்
பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad