பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஆலமரத்துப்பட்டியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமினை பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த முகாமில் எல்லா துறைகளிலும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன், மருந்தாளுனர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அதிக எண்ணிக்கையிலும் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார்,பாமக நிர்வாகிகளான சத்தியமூர்த்தி, சிவம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக