தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஜூலை, 2023

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் தருமபுரி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மு.ப.சதாசிவம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரு.இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநில துணைத் தலைவர் பெ‌.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில், இ.மா.பாலகிருஷ்ணன், மு.பாலாஜி, கு.சரவணகுமாரி, கா.கா.சித்துராஜ், ஒ.கே.சுப்ரமணியம், சி.வி.மாது, ப.இராமகிருஷ்ணன், கு.சுப்ரமணி, பெ,தேவேந்திரன், வி.எம்.சேகர், க.நம்பிராஜன், க.மாது, க.நம்பிராஜன், கே.இ.கிருஷ்ணன், ஆ.அன்பழகன், த. காமராஜி, ரெ.மு.மனோகரன், பெ.நந்திசிவம், இரா.மாது, தகடூர் இரவி, சி.சம்பத், மு.ஈஸ்வரன், இரா.ஜெயக்குமார், கி.முருகன், க.ஜெயலட்சுமி, சாந்தாவடிவேல், தமிழ்செல்வி, பெரியம்மாநாகு, சாந்தி, ஜெ.தகடூர்தமிழன், து.சத்தியமூர்த்தி, ப.சி.சிவக்குமார், ஆ.சத்திரியபிரபாகரன், தி.வாசுநாயுடு, சி.அய்யப்பன், மா.சங்கர், இரா.கார்த்திகேயன், ஸ்ரீதர், வை.சிவம், இராமமூர்த்தி, தீர்த்தமலை, ம.ப.வேடி, வி.பிரகாஷ், க.சையத்கலீம், ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தின் இறுதியில், நகர செயலாளர் கி.வெங்கடேசன் நன்றி கூறினார்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
  1. காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  2. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
  3. படித்த இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்லும் அவலநிலையை போக்க தருமபுரியில் உடனடியாக சிப்காட் தொடங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறது. 
  4. தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளி பழங்களை, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  5. பாமக 35-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அனைத்து கிராம கிளைகளும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி, கிளை கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
  6. அனைத்து கிராமங்களிலும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை தேர்வு செய்து, திண்ணை பரப்புரை செய்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
  7. 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவதெனவும், தமிழ்நாட்டிலுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad