தருமபுரி மாவட்டம் இயற்கையைக் காப்போம் தலைமையகம், பீனிக்ஸ் குழு, நீதி தேடல், சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை, கலாமின் சிறகுகள், பசுமை புரட்சி,பென்னாகரம் மக்கள் நலப்பணி சங்கம், அழகு பிக்கம்பட்டி, நீரின்றி அமையாது உலகு மற்றும் அறம் விதை அறக்கட்டளை ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பிக்கம்பட்டி கிராமத்தின் குளங்களில் ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டன.


பின்னர் இரண்டு குளக்கரையிலும் இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன பின்னர் பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நட்டு வளர்க்கப்பட்டு வரும் அரிய வகைகள் மற்றும் மண்ணின் மரங்கள் என 78 வகையான மரங்கள் மற்றும் பல அழகு, மூலிகை செடிகளும் இவ்வமைப்பினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வை பிக்கம்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ப.சரவணன் மற்றும் காரிமங்கலம் வனத்துறை அதிகாரி திரு.மதிவாணன் அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர் தாமோதரன் மற்றும் மா.சபரி வினோத், வெற்றிவேல் ஜோதி வெற்றிவேல் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக