தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பார்வையற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நூற்றாண்டு நினைவுப் பள்ளி வளாகத்தில் பாலக்கோடு பாமக கட்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் பெரியம்மாள்செட்டியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி .சேலம், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கண் தெரியாத பார்வையற்றவர்கள் 50 நபர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி தொகுப்பு மற்றும் பார்வையற்றவர்களுக்கு படிக்க எழுத உதவும் எழுத்து பலகை மற்றும் எழுத்தாணி வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோர் முன்னேற்ற நல சங்க நிர்வாகிகள், சேவா பாரத் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக