அரூர் கோட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகள், பள்ளிகள் அல்லது எவ்வகையான கல்வி நிலையங்களில் இருந்தும் 100 மீட்டர் பரப்பிற்குள் உள்ள ஏதேனும் வளாகத்தில், கடையில்,. அல்லது தனிப்பட்ட முறையில் இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக அல்லது பகிர்விற்காக சிகரெட்டுகள், பீடிகள், சுருட்டுகள், புகையிலை கொண்ட சுபாரி, ஜர்தா, மூக்குப்பொடி அல்லது வேறு ஏதேனும் புகை பிடிக்கும் அல்லது மெல்லும் பொருட்கள் அல்லது போதை ஊட்டக்கூடிய மிட்டாய்கள், அது சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
ஆகவே கல்வி நிலையங்களுக்கு 100 மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள பெட்டிக்கடைகள் அல்லது வணிக வளாகங்களில் உள்ளவர்கள் இத்தகைய விற்பனையை செய்யலாகாது என எச்சரிக்கப்படுகிறது.
இது தொடர்பான விவரங்கள் அறியப்படுமாயின் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பணியாளர்கள் அல்லது சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அல்லது அரசு அலுவலர்கள் இந்த தகவலை சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா வில்சன் இராச சேகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக