தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்த்திற்கு பதிவு செய்ய இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்த்திற்கு பதிவு செய்ய இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை பின்வரும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

தருமபுரி வருவாய் வட்டத்தில்.

எ.ரெட்டிஅள்ளி, அதகப்பாடி, பவளந்தூர், தித்தியோப்பனஅள்ளி, மாதேஅள்ளி, கடகத்தூர், செட்டிக்கரை, அளேதருமபுரி, நல்லனஅள்ளி, செம்மாண்டகுப்பம், உங்குரானஅள்ளி, கே.நடுஅள்ளி, குப்பூர், அன்னசாகரம், மிட்டாநூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, கிருஷ்ணாபுரம், ஆண்டிஅள்ளி, புழுதிக்கரை, கொண்டம்பட்டி, வெள்ளாளப்பட்டி, கோணங்கிநாய்க்கனஅள்ளி, வெள்ளோலை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, கோடு அள்ளி, வே.முத்தம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், 


பென்னாகரம் வருவாய் வட்டத்தில்,

வட்டுவனஅள்ளி, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பள்ளிப்பட்டி, பிக்கிலி, பனைகுளம், சிகரலஅள்ளி, அஞ்சேஅள்ளி, ரங்காபுரம், பேயல்மாரி, பருவதனஅள்ளி, கூத்தப்பாடி, அளேபுரம், செங்கானூர், கூக்குட்டமருதஅள்ளி, சத்தியநாதபுரம், அரக்காசனஅள்ளி, சின்னம்பள்ளி, கலப்பம்பாடி, மஞ்சநாயக்கனஅள்ளி, நாகமரை, இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, சுஞ்சல்நத்தம், தின்னபெல்லூர், அஜ்ஜனஅள்ளி, கோடிஅள்ளி, தொண்ணகுட்டஅள்ளி, சிடுமனஅள்ளி, பத்ரஅள்ளி, பெரும்பாலை, கெண்டனஅள்ளி ஆகிய கிராமங்களிலும், 


அரூர் வருவாய் வட்டத்தில், 

எச்.அக்ரஹாரம், மோப்பிரிப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யப்பட்டி, டி.ஆண்டியூர், வேடகட்டமடுவு, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, கோட்டப்பட்டி, பையர்நாயக்கன்பட்டி, சிட்டிலிங்கி, எஸ்.தாதம்பட்டி, அச்சல்வாடி, வடுகப்பட்டி, வேப்பநத்தம், கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, எம்.வெளாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, கீரைப்பட்டி, தாதரவலசை, எல்லப்புடையாம்பட்டி, செட்ரப்பட்டி, கொங்கவேம்பு, கே.வேட்ரப்பட்டி, மத்தியம்பட்டி, பறையப்பட்டி, மாம்பட்டி, சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைப் பகுதிகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.


தருமபுரி நகராட்சிப் பகுதியில் உள்ள வெள்ளேகவுண்டன்பாளையம், விருப்பாட்சிபுரம் ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும், பேரூராட்சிகளை பொறுத்தவரை, அரூர், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகரம் ஆகிய பேரூராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad