இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் / லால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. அ.சௌந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களான மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.அப்துல் சமது அவர்கள், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம.கருமாணிக்கம் அவர்கள், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பெ.கிரி அவர்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தி.சதன் திருமலைக்குமார் அவர்கள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி. கே. கலைவாணன் அவர்கள் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதையடுத்து உற்பத்தி பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், ஆலையின் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இது குறித்து அறிக்கை அளிக்கும் படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு அறிவுரை வழங்கினர்.
இந்நிகழ்வுகளின் போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சம்பத்குமார், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச்செயலாளர் திரு.செ.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி. வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.லட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக