தருமபுரி மாவட்டம் இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட டொக்கம்பட்டி கிராம மக்களே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாடையுடன் வந்தவர்கள், தங்களது ஊரில் கால காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்தினை அதே ஊரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அபகரித்து கொண்டதாக புகார் கொடுக்க வந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.. ஊருக்கே பொதுவான சுடுகாட்டு நிலத்தை இப்படி அபகரித்து கொள்வது நியாயம் தானா என அதிமுக நிர்வாகியிடம் முறையிட்ட போது யாரவது உயிரிழந்தால் அவர் அவரது வீடுகளிலேயே புதைத்து கொள்ளுங்கள், இங்கே வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.


சுடுகாட்டு நிலத்தை மீட்டுதரக்கோரி சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், கம்பைநல்லூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்தே வேறு வழியின்றி பாடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுலகத்திற்கு புகார் மனு கொடுக்க ஊரே திரண்டு வந்திருப்பதாக தெரிவிக்கும் கிராம மக்கள், தங்களது மனு மீது மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும், அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு கொடுத்த ஆவணங்களான ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே திரும்ப ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக