தருமபுரி மாவட்டத்திற்கு வந்த ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

தருமபுரி மாவட்டத்திற்கு வந்த ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு.


7-வது ஹூரோ ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பை போட்டி சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாம்பியன்ஸ் கோப்பை அறிமுக விழாவை அரசு மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது. 

அந்த வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் கோப்பையை அறிமுகப்படுத்தி உலா வரும் விழாவை "பாஸ் தி பால் டிராபி டூர்" என்ற நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெற்று பல்வேறு மாவட்டங்களின் வழியாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது. 

தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த கோப்பையை தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் SP. வெங்கடேஸ்வரன் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரவேற்றார், இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை உற்சாகத்துடன் வரவேற்றனர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad