திம்லாமேடு கிராமத்தில் செல்வ விநாயகர் ஸ்ரீ பொன்மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 ஜூலை, 2023

திம்லாமேடு கிராமத்தில் செல்வ விநாயகர் ஸ்ரீ பொன்மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள   திம்லாமேடு கிராமத்தில் அருள்மிகு செல்வவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ பொன் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ நவகிரகம் திருக்கோவில் நூதன ஆலயம் புதியதாக கட்டப்பட்டு திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைப்பெற்றது.


இந்த விழாவானது கடந்த 28ம் தேதி புதன்கிழமை   கொடியேற்றி கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு,  ஆனந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாடு, பூர்ணாஹநிதி நடந்தது. 


இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலச தீர்த்தத்தை சிவாச்சியர்கள், ஊர் கவுண்டர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கோபுர  கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ பொன் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மந்திரி கவுண்டர் ராஜா, ஊர்பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad