தர்மபுரி மாவட்ட நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க தலைவர் முனிரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, சென்னையில் தமிழ் நாடு நர்சரி அண்டு பிரைமரி, மெட்ரிகுலே ஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங் கத்தின் சார்பில் மாபெரும் கோரிக்கை மாநாடு வரும் 15ம் தேதி நடக்கிறது.


அதே நேரம் மாவட்ட வாரியாக சாதனை புரிந்த பள்ளி களுக்கு விருது வழங்கும் விழாவும் நடக்கிறது. தனியார் பள்ளி துவங்க விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், சொத்து வரியில் அரசு பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வரிவிதிப்பு, ஜப்தி, நடவ டிக்கையில் ஈடுபடுவதை அரசு கைவிட வேண்டும். தனியார் பள்ளிக்கு எதிராக உள்ள புதிய சட்டங்களை நீக்க வேண்டும். நர்சரி பிரைமரி பள்ளிகளை நடு நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்பவைகளை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது.
எனவே இந்த கோரிக்கை மாநாட்டில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தாளாளர்கள், நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக