வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு மூன்று மாதங்களாக தேங்கி நிற்கும் சாக்கடை, பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 ஜூலை, 2023

வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு மூன்று மாதங்களாக தேங்கி நிற்கும் சாக்கடை, பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்.


கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு மூன்று மாதங்களாக தேங்கி நிற்கும் சாக்கடை, பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் முன்பு சரி செய்யக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கிராம மக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி  ஒன்றியம் கேத்திரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பிலை பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி நுழைவாயில் முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது, இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் சாக்கடை நீரில் நடந்தவாறு சென்று வருகின்றனர் இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும்  சாக்கடை நீர் எளிமையாக செல்ல கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்தனர், மேலும் உடனடியாக சாக்கடை நீர் கால்வாயை தூர்வாரி தகுந்த இடத்தில் இணைக்க வேண்டும் என்று  கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வேப்பிலைப்பட்டி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad