பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகாம்களை கண்காணிப்பாளர் இன்றுநேரில் சென்று பார்வையிட்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஜூலை, 2023

பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகாம்களை கண்காணிப்பாளர் இன்றுநேரில் சென்று பார்வையிட்டார்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் கெசர்குளிரோடு, கமால் சாயபு தெரு, முத்து கவுண்டர்தெரு, தீர்த்தகிரி நகர், பங்களாதெரு, சி.ஆர்.எஸ்.நியாய விலை கடை பகுதி, ஸ்ரீவித்யாமந்திர்பள்ளி  உள்ளிட்ட 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை  விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகாம்களை  மகளிர் உரிமை தொகை முகாம் கண்காணிப்பு அதிகாரி டார்த்தி அவர்கள்  நேரில் சென்று விண்ணப்பதாரர்களிடம் உரிய முறையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, அதனுடன் உரிய சான்றிதழ்கள் இணைப்பட்டுள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad