தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வெள்ளோலை ஊராட்சி நரசிங்கபுரம் கோம்பை கிராமத்தில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாமக மேற்கு மாவட்ட செயலாளரும் மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் க. மாது வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேட்டு மருத்துவர் அன்புமணிஇராமதாஸ் அவர்களின் உதவியாளர் த .சொல்லின் செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்ரீதரன் ஒன்றிய செயலாளர் வேடியப்பன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக