ஏரியூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை உடனடியாக திறக்க தமிழ்ப்புலிகள் கட்சியினர் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஏரியூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை உடனடியாக திறக்க தமிழ்ப்புலிகள் கட்சியினர் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் சுஞ்சல்நத்தம் ஊராட்சியில் ஏரியூர் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேல் ஆகின்றது, சில காரணங்களால் இன்னும் பேருந்து நிலையத்தை திறக்கபடவில்லை. இது குறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பழ.முனுசாமி கூறுகையில், வெளியூர்களில் இருந்து ஏரியூர் பகுதிக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், குறிப்பாக பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் ஏரியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கடந்து பாதுகாப்பில்லாமல் காட்டுப்பகுதியை பயன்படுத்துகின்றனர்.


ஏரியூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை கட்டியும் இன்னும் திறக்கவில்லை. பல்வேறு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கழிப்பைறை வசதி செய்து தர மனுவின் மூலம் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இது திறக்கப்படவில்லை என்றால் தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக மற்றும் ஏரியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சார்பாக மிகப்பெரிய ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நாங்கள் எடுப்போம், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தமிழ் புலிகளின் கட்சியின் சார்பாக இரு கரம் கூப்பி வேண்டுகிறோம் இது ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டின் பெரியார் மண்ணில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் அதேபோல் இது திராவிட திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகத்தான் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். 


உரிய நேரத்தில் ஏரியூர் பேருந்து நிலையத்தை திறந்து கழிவறையை திறக்க வேண்டும் என்று தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad