மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்.


மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்ட விழிப்புணர்வு  முகாம் பாலக்கோடு வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக மூத்த வழக்கறிஞர் சேகர் அவர்களின் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம்  இன்று நடைப்பெற்றது.


இதில் சட்டவிரோதமாக குழந்தைகளை கடினமான வேலைகளில் அமர்த்துவது, பள்ளி செல்லும் குழந்தைகளை ஒப்பந்த வேலைகளில் அமர்த்துவது,  தொழிலாளர்களை ஒப்பந்த விதத்தில் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதற்கு உறுதுனையாக  பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வள்ளி நாயகி,வழக்கறிஞர் கள் ஜோதி,கமலி மக்கள் இலவச சட்ட பணக்குழு சின்னசாமி, செயல் அலுவலர் ஆயிஷா பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் துணைத் தலைவர் கார்த்திகா, இளநிலை உதவியாளர் சம்பத், கவுன்சிலர்கள் கீதா, லட்சுமி, யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, புவனேஸ்வரி, அபிராமி, வெங்கடேசன் மற்றும் பன்னீர் செல்வம், முனிராஜ், குழந்தை வேலு, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad