கரகூர் கிராமத்தில் வேளாண்துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூலை, 2023

கரகூர் கிராமத்தில் வேளாண்துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திருவிழா.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாரம் கரகூர் கிராமத்தில் வேளாண்துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திருவிழா நடந்தது, பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குனர் அருள்மணி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் அவர்கள் அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை வரவேற்புரை அளித்தார். வேளாண்மை துணை இயக்குனர், மாநில அரசு திட்டம் அருள் வடிவு வேளாண் துறை சார்ந்த கண்காட்சியை தொடங்கி வைத்து வேளாண் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்கள் பயிர்களில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். 


ஊராட்சி ஒன்றிய அலுவலர்,  வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிக துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண் அலுவலர் உயிர் உர உற்பத்தி மையம், வனச்சரக அலுவலர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர். 


இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண்துறை அலுவலர்கள் பதிலளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் அவர்கள் இவ் விழாவினை நிறைவு செய்து வைத்தார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad