தர்மபுரி கேந்திரா வித்யாலயா பள்ளியில், உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஜூலை, 2023

தர்மபுரி கேந்திரா வித்யாலயா பள்ளியில், உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு நிகழ்வு.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர், உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாணவ மாணவியருக்கு உணவு பாதுகாப்பு குறித்தும், உணவுப் பொருட்கள்  லேபிள்களில் காண வேண்டிய அம்சம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., வழிகாட்டல் படி, தர்மபுரி மாவட்டம், தர்மபுரி கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்தில், கேந்திர வித்யாலயா பள்ளி,தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் கிருஷ்ணகிரி நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம்  இணைந்து உணவுப் பொருள்களில் லேபிள் நடைமுறை, கலப்படம் கண்டறிதல் மற்றும் நுகர்வோர் சட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும்  நேரடி செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது.

பள்ளி பொருளியல் ஆசிரியர். திருநாவுக்கரசு வரவேற்புரையுடன், கிருஷ்ணகிரி நுகர்வோர் நலச்சங்கம் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் ஏ.ஜி. ஜாய் முன்னிலையில் பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ். சிறப்புரையுடன், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் விழிப்புணர்வு உரை  மற்றும் நேரடி செயல் விளக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளி முதல்வர் தன் உரையில் விழிப்புணர்வு நிகழ்வு  மூலம்  பயிலும் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி குடும்பத்தார், சுற்றுப்புறத்தாருக்கும் ஒரு பயனுள்ள நிகழ்வாக இருக்கும் எனவும் நிகழ்வை கவனமாக உள்வாங்கி உரிய விளக்கம் பெற்று தாங்கள் வாங்கும் தின்பண்டங்களில் உரிய லேபிள் மற்றும் உள்ளடக்கம் குறித்து எடுத்துரைத்துடன் துரித, ஜங்க் ஃபுட் உணவுகளை தவிர்த்து சிறுதானியங்களில் செய்த தின்பண்டங்கள் , உணவுகள் எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார். நுகர்வோர் தலைவர் ஜாய் தன் பேச்சில், நுகர்வோர் சட்டம் குறித்தும் மாணவ மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள், நுகர்வோர் சட்டங்கள் குறித்தும் அவர்களுக்குள்ள உரிமைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 


காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால், உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்தும் , பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருள்களில் லேபிள்களில் காணப்பட வேண்டிய அம்சங்களான உணவுப் பொருள் பெயர்,தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி உணவு பாதுகாப்பு உரிம எண் , சைவ அசைவ குறியீடு, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் நுகர்வோர் தொடர்பு எண் என கண்டிப்பாக 13 அம்சங்கள் இருக்க வேண்டும் என உணவுப் பொருள்கள் கொண்டு செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு செய்தார் மேலும் வீட்டளவில் நேரடியாக உணவுப் பொருட்களில்  கலப்படம் கண்டறிதல் குறித்து உணவுப் பொருட்களை வைத்தே நேரடியாக செயல் விளக்கம் அளித்தார், குறிப்பாக பால்,தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகு, பச்சை பட்டாணி, மற்றும் நெய்  உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், ஒரு சில தின்பண்டங்கள், குளிர்பானங்களில் காணும் தப்பான அம்சங்கள் குறித்தும் தவிர்க்க வேண்டியவை குறித்தும் பொருட்களைக் கொண்டு நேரடியாக செயல் விளக்கம் அளித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


மேலும் அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து குறைபாடினால் ஏற்படுக்கூடிய குறைபாடுகள் குறித்தும் அயோடின் உப்பு அவசியம் குறித்தும் உப்பில் அயோடின் உள்ளதா இல்லையா என்பதை பாக்கெட்டுகளைக் கொண்டும் உப்பில் அயோடின் கண்டறிதல்  குறித்தும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல் குறித்தும்  குறித்து செயல் விளக்கம் அளித்தார். 


உணவே மருந்து.. மருந்தே உணவு, கொஞ்சம் உப்பு! கொஞ்சம் சர்க்கரை!! கொஞ்சம் எண்ணெய்!!! என பயன்படுத்தினால் நோயின்றி வாழலாம் என முற்றுப்புள்ளி வைத்ததுடன் நிகழ்வில் மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் , ஆங்கில பேராசிரியை. கீதாகோபாலன், கேந்திர வித்யாலயா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. (பொறுப்பு ) பிரதீபா கவுதம்,  காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்க செயலாளர். செந்தில்குமார்  மற்றும் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உடன் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள்  பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad