கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கிய ஆர்வலர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 31 ஜூலை, 2023

கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கிய ஆர்வலர்.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் இரயில்வே ஒப்பந்ததாரர் ந.பரமசிவம் மற்றும் சிவசங்கரி குடும்பத்தினர் சார்பில் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நாகலட்சுமி காவல் ஆய்வாளர் அவர்கள் பங்கேற்றார். இந்நிகழ்விற்கு  தேவராஜன் தலைமை வகித்தார்.


இந்நிகழ்வில் தொழில் அதிபர் கல்பனா, சம்பத் ஊராட்சி மன்ற தலைவர், சி.ஏழுமலை ஆசிரியர், மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், அறிவழகன் தலைமை ஆசிரியர் ஓய்வு, உசாநந்தினி தலைமை ஆசிரியை, மருத்துவர் சக்திவேல் தீர்த்தகிரி, முருகேசன், பழனிசாமி, அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வு ந.பரமசிவம்  சிவசங்கரி  தம்பதியினர் முன்னிலையில் நடைப்பெற்றது. 2022-2023 ம் கல்வியாண்டில் கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த இரண்டு மாணவிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் காசோலையும்  மற்றும் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்த மாணவி மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்க்கும்  4 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார் . பின்னர் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார். 


பின்னர் 375 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.பின்னர் அப்பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார். இந்நிகழ்வின் இறுதியில் அனைத்து மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.நிகழ்ச்சி தொடங்கும் முன்பு ஊர் பொதுமக்கள் சார்பாக ந.பரமசிவம் -சிவசங்கரி குடும்பத்தினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரின் இந்த செயலினை அந்த பகுதியினை சார்ந்த பொதுமக்கள் மற்றும் கல்வியாளர் பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad