விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிருஷ்னகிரி மண்டல செயலாளராக அறிவிக்கப்பட்ட ஜே.கே. தமிழ்அன்வர் கட்சியின் மூத்த பொறுப்பாளர்களை சந்தித்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மண்டல செயலாளராக பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜே.கே.தமிழ்அன்வர் என்பவரை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நியமித்தார் இதையடுத்து புதியதாக பொறுப்பேற்ற மண்டல செயலாளர் ஜே.கே.தமிழ்அன்வர் தருமபுரி கிழக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் அரசு ஊழியர் ஐய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறிவக அறக்கட்டளை முண்ணனி பொறுப்பாளர்கள் பா.மாதையன் எ.கொ.அம்பேத்கர் மு.சிவராமன் சேகர் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
உடன் தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி ஒன்றிய துணை செயலாளர் தீரன் தீர்த்தகிரி ஒன்றிய பொருளாளர் ராமசாமி திருமாசக்தி இளையராஜா மருதைகுப்புசாமி அழகரசன் நிகில் பாபிரெட்டிபட்டி நிர்வாகிகள் சுபாஸ் அரவிந்தன் செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக