காரிமங்கலம் ஒன்றியத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூலை, 2023

காரிமங்கலம் ஒன்றியத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம், தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர உணவகங்கள், தாபாக்கள், சில்லி சிக்கன், மீன்  இறைச்சி, ஃபாஸ்ட் ஃபுட் போன்ற துரித உணவு உணவகங்களில் சமையல் எண்ணெய், மூலப்பொருள்களின் தர உபயோகம் குறித்தும், உபயோகப்படுத்திய பழைய எண்ணெய் பலமுறை உபயோகம் உள்ளதா தேவையற்ற செயற்கை நிறமூட்டி கலர் பவுடர்கள் சேர்க்கப்படுகிறதா எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழி கவர்கள் தடை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை, மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக்கொள்ள விழிப்புணர்வு  மேற்கொள்ளவும் மேலும் பள்ளி அருகில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உரிய லேபிள் நடைமுறை உள்ளனவா தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வும், விதிகள்  மீறி இருந்தால் அபராதம் விதிக்க  அறிவுறுத்திருந்தார்.


அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம்,  முதலிப்பட்டி, எலுமிச்சனள்ளி உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலை ஓர உணவகங்கள், தாபாக்கள், துரித உணவு பா‌‍ஸ்ட் புட் கடைகள் மற்றும் பள்ளி அருகாமையில் உள்ள மளிகை,பெட்டி கடைகளில் ஆய்வு செய்தார். ஆய்வில்  ஒரு தாபா, ஒரு துரித உணவு கடை  மற்றும் ஒரு பலகார கடை ஆகியவற்றிலிருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் சுமார் 5 லிட்டர் அளவு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. 


செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி அருகாமையில் உள்ள பெட்டி கடைகளில் தின்பண்டங்கள் உரிய விபர லேபில்கள் இல்லாத குறித்து கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு செய்து உரிய விபரங்கள் உள்ள பொருட்கள், காலாவதி தேதி உள்ளதா என்பதை கண்காணித்து வாங்கி விற்பனை செய்யவும் உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற்று வணிகம் தொடரவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. 


இரண்டு மளிகைக் கடையில் இருந்து காலாவதியான கடலை மாவு மற்றும் உரிய விவரங்கள் இல்லாத குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள் மேலும் உரிய விபர சீட்டு இல்லாத நிப்பட் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது மேற்படி கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் அபராதம் என நான்கு கடைகளுக்கு ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை ரூகோ டீலரிடம் அளிக்க விழிப்புணர்வு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு  உரிமம் பெறாத தாபா உணவகத்திற்கு உரிமம் எடுக்க வழிவகை நோட்டீஸ் வழங்கி உடனடியாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 


ஆய்வின் போது எலுமிச்சனள்ளி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையமும், அங்கன்வாடி மையமும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடுநிலைப்பள்ளி சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களில் சமைத்த உணவு தரம் , மூலப் பொருட்கள் காலாவதி தன்மை, கழிவு பொருட்கள் முறையாக அகற்றம், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் கடைபிடிக்கப்படுகிறதா எனவும், உணவு மாதிரி எடுத்து வைக்கபடுகிறதா என கண்காணித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளி ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, அமைப்பாளர் பூர்ணிமா மற்றும் சமையலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad