மனித நேய விருது.சமூக சேவை பொதுச் சேவை கல்வி சேவையில் சிறப்பாக பணியாற்றி வரும் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பழனி துரைக்கு மனிதநேய விருது வழங்கப்படுகிறது, இவர் தொடர்ந்து அன்னை தெரேசா பேரவையின் 15 ஆண்டுகளாக சேவை செய்து வருவதை பாராட்டியும் கல்விச் சேவையில் 28 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றத்தை பாராட்டியும் சுயநலம் இல்லாமல் பொதுநலத்தில் ஆர்வம் காட்டி சமூக சேவை செய்தவரும்சுயநல மற்ற பொது சேவைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துமனிதநேய விருது வழங்கப்பட்டது.


தர்மபுரி சமூக சேவை நண்பர்கள் சங்கம் சார்பாகவும், மாரல் ஆராய்ச்சி மையம் இந்தியா நிறுவனத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது, அரூர் கல்வி மாவட்ட துவக்கப்பள்ளி கல்வி அதிகாரி கரங்களால் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பழனி துரை உடற்கல்வி ஆசிரியரை நேர்முக உதவியாளர் கண்காணிப்பாளர் அன்பழகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக