தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகேவுள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொடுகட்டை காடு கிராமத்து பெண் விவசாயிகளே கண்களில் கருப்புத்துணி கட்டிகொண்டு நூதன போரட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயிகள் கூறும் போது தங்களது கிராமத்தில் கால்நடைகளிலிருந்து தினசரி சுமார் 300 லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்து வருவதாகவும், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பழைய தாய் சங்கமாக இருந்து வரும் வத்தலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பாலை வழங்கி வருவதாகவும், தங்களது குடியிருப்புகளிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் சென்று சங்கத்திற்கு பாலை வழங்க வேண்டியிருக்கிறது, காலை மாலை என இரு வேளையும் சென்று வர வேண்டியிருப்பதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது, எனவே தங்களது வீட்டருகே கொடுக்கட்டை காடு கிராமத்திலேயே மகளிருக்கென தனியாக புதிய மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை அமைத்து தரவேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனக்கூறுகின்றனர் பெண் விவசாயிகள்..
புதிய சங்கம் துவக்கிட முறையாக அரசாங்கத்திற்கு விண்பபம் செய்திருப்பதாகவும், இது தொடர்பாக பால் வளத்துறை துணை பதிவாளர் உள்ளி்ட்ட அரசு அதிகாரிகளும் தங்களது கிராமத்திற்கு நேரி்ல் வந்த பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிருக்கின்றனர், எனவே தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தங்களது கோரிக்கையினை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை வேண்டுமன தெரிவிக்கின்றனர் கொடுக்கட்டை காடு கிராமத்து பெண் விவசாயிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக