பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அவதி- மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஜூலை, 2023

பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அவதி- மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட   எர்ரணஹள்ளி ஊராட்சி மூங்கப்பட்டி, ரெட்டியூர், சமத்துவபுரம், வி.செட்டிஏரிபள்ளம்   வரை உள்ள சுமார் 3 கி.மீ  உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக தினந்தோறும் பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 


இச்சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், காய்கறி, பழங்கள், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் சில நேரங்களில் அவசர ஊர்தி செல்லுவதில் சேரும் சங்கதிமாக உள்ளதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாகதா ர்சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad